You will make it....

You will make it....

Saturday, October 3, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 13

பங்குச்சந்தை கடந்த ஆறு மாதங்களில் நல்ல வளர்ச்சி அடைந்து, இப்போது மீண்டும் ஒரு Correction இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் நிறைய பங்குகள் நல்ல விலை கூடி முதலீட்டளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்திருக்கிறது. நிறைய பேர் இந்த ஆறு மாத வளர்ச்சியை சரியாக பயன் படுத்த முடியாமல் போய் இருக்கலாம். மேலும், அடுத்த Correction ஆன பிறகு பங்குகளை வாங்குவது பற்றி பார்க்கலாம்.

நாம் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியது போல அடிப்படை வலுவாக உள்ள பங்குகளை வாங்க வேண்டும். மேலும் இந்த ஆறு மாதத்தில் சில பங்குகள் நல்ல விலை உயர்வு அடைந்திருக்கிறது. அப்படி பட்ட பங்குகள் இனி விலை குறையும் போது வாங்குவது மீண்டும் அதை போல நல்ல லாபம் தரலாம். அதனால் கடந்த ஆறு மாத கால வளர்ச்சியில் நல்ல விலை உயர்ந்த பங்குகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவை விலை குறையும் போது நாம் வாங்கலாம். முதலில் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த துறையில் இருக்கும் பங்குகளை ஒரு ஒப்பீடு செய்து பார்த்து, அவற்றில் நல்லதை வாங்கலாம்.

உதாரணமாக கட்டுமானத்துறை ஐ எடுத்துக்கொள்வோம். அதில் இந்த ஆண்டு மார்ச் இல் நன்கு விலை குறைந்திருந்த பங்குகளை முதலில் எடுத்துக்கொள்வோம். நன்கு விலை குறைந்த பங்கு என்று எப்படி கண்டு பிடிப்பது? மார்ச் இல் 52 வாரம் குறைந்த விலையை நெருங்கிய பங்குகள், நன்கு விலை குறைந்திருக்கிறதாக எடுத்துக்கொண்டு, அந்த பங்குகளின் விலையை அக்டோபர் 01, 2009 விலையுடன் ஒப்பிட்டு பார்த்து, அதில் அதிக அளவு அதாவது அதிக சதவிகிதம் விலை உயர்ந்த பங்குகளை, இனி விலை குறையும் போது வாங்கலாம். கீழே கொடுத்திருக்கும் அட்டவணையை பார்த்தல் உங்களுக்கே புரியும் (கட்டுமானத்துறையின் அனைத்து பங்குகளையும் இந்த அட்டவணையில் சேர்க்கவில்லை.)



முதலீட்டுக்கு பங்குகளை தேர்ந்தெடுக்கும் வழிகளில் இன்றைய சூழ்நிலையில் இதுவும் ஒரு வழி. இந்த முறையை எப்பொழுதும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், கடந்த ஆண்டு பங்குச்சந்தை சந்தித்த சரிவால் அனைத்து பங்குகளும் தலைகீழாக விழுந்திருக்கிறது. அப்படி விழுந்த பங்குகள், இந்த ஆறு மாதத்தில் உயர ஆரம்பித்திருக்கிறது. ஆக, சந்தை நல்ல நிலையில் முன்னேறினால் இந்த பங்குகள் விலை கூடும் என்று நம்பி வாங்கலாம். ஏனென்றால், சந்தை அதல பாதாளத்தில் இருக்கும் போது சரிவை சந்தித்த பங்குகள், சந்தை உயரும் போது வேகமாக விலை கூடுகிறது என்றால், அவை நல்ல பங்குகளாகத்த்தானே இருக்க வேண்டும்? அது மட்டுமில்லாமல், சந்தை குறையும் போது கூட விலை கூடிய பங்குகள் சில உண்டு. அப்படி பட்ட பங்குகள் விலை குறையவில்லை என்பதால் அவை எதிர்காலத்தில் எவ்வளவு கூடும் என்று கணிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கலாம். (உதாரணம் FMCG Sector - MARICO , HUL, etc). அதனால் சந்தை குறையும் போது நல்ல விலை குறைந்து, சந்தை கூடும்போது உயரும் பங்குகளை வாங்கினால், சந்தை மீண்டும் அடுத்த உயர்வுக்கு வரும் போது, இந்த மாதிரி பங்குகள் நல்ல விலை கூடும். ஒரு விஷயத்தை இப்போது நாம் நினைவில் கொள்ள வேண்டும் - 2010 இல் BSE 21,000௦௦௦ புள்ளிகளை தொடும் என்பது கணிப்பாக இருக்கிறது. எனவே, நல்ல பங்குகளாக தேர்ந்தெடுத்து, வரும் Correction -இல் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. இது பங்கு பரிந்துரை அல்ல. உங்களுக்கு எந்த Sector -இல் முதலீடு செய்ய வேண்டுமோ அதிலுள்ள பங்குகளை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொன்னா தேடி பார்த்துதான் பங்குச்சந்தையில் பணம் பார்க்க முடியுமா என்று நீங்கள் நினைக்கலாம். சம்பாதிக்கனும்னா கொஞ்சம் வேலையும் செய்யணுமே...!!!

சந்தை இப்படி ஒரு சரிவை சந்தித்திருக்கா விட்டால் இந்த முறையில் பங்குகளை தேர்ந்தெடுப்பது ஆபத்தாக முடியும்.
Page copy protected against web site content infringement by Copyscape