You will make it....

You will make it....

Saturday, March 7, 2009

நல்ல வருமானம் கிடைக்க எங்கே முதலீடு செய்யலாம்?

நம் ஒவ்வொருவருக்குமே நம்மிடம் இருக்கும் சேமிப்பை எப்படி நல்ல வருமானம் தருவதாக ஆக்க முடியும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணமாக நம்மிடம் பணம் உபரியாக இருக்கிறது என்றால் அதை எப்படி சேமிப்பில் சேர்க்கலாம், எந்த முறையில் சேமித்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்ற எண்ணம் எல்லோருக்குமே உண்டு. இந்த பதிவில் சேமிக்கும் வழிமுறை பற்றி பார்க்கலாம்.
நம்மிடம் இருக்கும் பணத்தை கீழே இருக்கும் முறைகளில் சேமிக்கலாம்.

1. வங்கியில் வைப்பு நிதி (Fixed Deposit)
2. தங்கம்
3. நிலம்
4. பங்குச்சந்தை
5. பரஸ்பர நிதி (Mutual Fund)

சேமிக்கும் முறையை தேர்ந்தெடுக்கும் முன் அந்த சேமிப்பு பணவீக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை நியதி. அதனால் இந்த பதிவை படிக்கும் இந்த நேரத்தில் நான் ஏற்கனவே எழுதி இருக்கும் ஒரு பதிவான "பணவீக்கமும் நமது சேமிப்பும் " என்ற தலைப்பில் February 2009 இல் எழுதிய பதிவையும் படித்தால் நல்லது. இனி சேமிக்கும் வழிமுறைகளை பார்போம்.

1. வங்கியில் வைப்பு நிதி (Fixed Deposit)
வங்கியின் வட்டி நிலவரங்கள் இன்றைய நிலையில் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. ஏனென்றால் மத்திய வங்கி (Reserve Bank of India) வட்டி விகிதத்தை அடிக்கடி மாற்றுவதால் எல்லா வங்கிகளுமே ஒருவித குழப்பத்தில் இருப்பதால் இன்றைய நிலையில் வங்கியின் வட்டி விகிதம் ஒரு நிலை இல்லாத நிலை இல் இருக்கிறது. இன்றைய நிலையில் வங்கி வட்டி விகிதம் 7 முதல் 8 சதவீதம் வரை இருக்கிறது. நான் ஏற்கனவே முந்தைய பதிவில் சொன்னது போல் நம்முடைய பணவீக்கம் அனேகமாக 5 முதல் ௬ சதவீதம் வரை இருக்கும். ஆக வங்கி வட்டி இன்றைய நிலையில் பாதுகாப்பாக தெரிந்தாலும், அது நிரந்தரம் இல்லை. இதற்கு அடுத்த முதலீட்டு வாய்ப்ப்பாக வருவது தங்கம்.

2. தங்கம்
தங்கம் என்பது இந்தியாவை பொறுத்த வரை அதிக தேவை (Demand) இருக்கும் ஒரு பொருள். இந்தியாவில் இருக்கும் ஒவொருவருக்கும் தம்மிடம்தங்கம் இருந்தால் அது மிகப்பெரிய சேமிப்பு என்று சொல்லும் அளவு மதிப்பான ஒரு பொருள் தங்கம். அனால் இந்த தங்கத்தை ஆபரணமாக வாங்கினால் செய்கூலி, சேதாரம் னு நிறைய செலவுகளுக்கு உள்ளாகிறது. அதே மாதிரி நாம் வாங்கிய நகையை விற்க போனால் அப்போவும் அந்த கழிவு இந்த கழிவு என்று நாம் கொடுத்த பணத்தை விட குறைந்த பணமே கிடைக்கும் நிலை. அதனால் நாம் தங்கத்தை ஒரு சேமிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு பண்ணினால் ஆபரண தங்கம் வாங்குவது சரி இல்லை. சுத்த தங்கம் அதாவது Pure Gold வாங்கினால் அது சேமிப்பு என்ற வகையில் சேரும். சரி Pure Gold வாங்கி அதை வீட்டில் பத்திரமாக பூட்டி வைத்து எப்போது திருடன் வருவானோ என்ற பயத்தில் இருப்பதை விட Gold Exchange Traded Fund வாங்கலாம். உங்களிடம் தேமட் இருந்தால் இது சாத்தியம். இல்லேன்னா தங்கத்தை வாங்கி வீட்டில் பூட்டி வைத்து பாதுகாக்க வேண்டியதுதான். அனால் இந்த தங்கம் என்பது உண்மையிலேயே வங்கி வட்டியை விட சிறந்ததா என்று யோசித்தோம் என்றால் சிறந்தது தான் என்று உடனே சொல்லி விட முடியாது. குறிப்பாக 1998 இல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 500 ரோபாயாக இருந்தது அதுவே 2008 இல் தான் 1000 ரூபாயை தாண்டியது. ஆக 10 வருடத்தில் 2 மடங்காக ஆகி இருக்கிறது. அதாவது சராசரியாக வருடத்திற்கு 7.18 சதவீதம் வருமானம் கொடுத்திருக்கிறது. இதற்கும் வங்கி வட்டிக்கும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் அதிக வித்தியாசமில்லையே? அனால் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். வங்கி வட்டி என்பது மேலும் கீழுமாக இருந்தாலும், தங்கம் என்பது என்று இருந்தாலும் நம் கையில் இருக்கும் ஒரு பொருள். இந்தியாவில் தங்கத்துக்கு என்றுமே தேவை (Demand) இருக்கும் என்பதால் வங்கி வட்டியை விட தங்கம் ஓரளவு நல்ல வருமானத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுக்கு அடுத்து சேமிப்பு என்று பார்க்கும்போது நம் கண்ணில் தெரிவது நிலம். அது பற்றி பார்போம்.

3. நிலம்
நிலம் என்ற பேச்சி வந்துவிட்டாலே அது ஒருவித மயக்கம் தரும் விஷயம். சென்னை இல் எனக்கு ஒரு கிரவுண்டு (Ground) நிலம் இருக்கிறது என்று சொன்னாலே அது மிக பெருமையான விஷயம் என்ற ஒரு நிலை ஆகி விட்டது. உண்மைதான் - நிலம் வைத்திருந்தால் அது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்பது உண்மைதான். அனால் நிலத்தை வாங்க வேண்டும் என்றால் அதற்கு பெரிய தொகை வேண்டும். தங்கம் நாம் நினைக்கும் போது நம்மிடம் இருக்கும் பணத்தை பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். அதாவது நம்மிடம் ஒரு 10000 ருபாய் இருந்தால் அதற்கு தங்கம் வாங்கிக்கலாம். அனால் நிலம் என்றால் அப்படியா? இல்லையே. அதற்கு மிக பெரிய தொகை வேண்டும். அப்படியே மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து நிலம் வாங்கினாலும் நாம் விற்கப்போகும் போது விலையை குறைத்துத்தான் கேட்பார்கள். ஏனென்றால் நம் நாட்டில் (நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இப்படித்தான்) நம்மிடம் இருக்கும் நிலத்தை விற்க போகும் போது விலையை குறைத்துதான் கேட்பார்கள். ஏனென்றால் நிலம் வாங்கும் - விற்கும் சந்தை தரகர்களின் கையில் இருக்கிறது. அதனால் நிலம் என்பது ஒரு நல்ல முதலீடு தான். இருந்தாலும் தரகர்களின் ஈடுபாட்டை நமக்கு சமாளிக்க தெரிய வேண்டும். ஆனாலும் நிலம் நல்ல முதலீடுதான். அதிகமான முதலீடு, தரகர் இப்படி பிரச்னைகள் இருந்தாலும், நிலம் நல்ல முதலீடுதான் - அதாவது நாம் ஏற்கனவே பார்த்த இரண்டு முதலீட்டையும் விட இது நல்ல முதலீடு தான் சந்தேகமே வேண்டாம். அதிக பணம் வேண்டும் அது ஒரு மிகப்பெரிய குறைபாடு. அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முதலீட்டு வாய்ப்பு பங்குச்சந்தை.

4.பங்குச்சந்தை
பங்குச்சந்தை முதலீடு என்பது ஓரளவு விஷயம் தெரிந்து செய்ய வேண்டியது. என்னென்ன விஷயங்களை தெரிந்து அதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்குவதற்காகத்தான் இந்த வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. பங்குச்சந்தை என்பது சூதாட்டமா என்னும் தலைப்பில் வரும் தொடர் பங்குச்சந்தை பற்றி அணைத்து விஷயங்களையும் அலசும். ஆனால் இதற்கு முன் பார்த்த மூன்று முதலீட்டு வழியை விட பங்குச்சந்தையில் அதிக வருமாம் பார்க்கலாம். கடந்த ௨௦ ஆண்டு புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, பங்கு சந்தை சராசரியாக வருடத்திற்கு 17 சதவீதம் வருவாய் கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. இது வங்கி வட்டியை விட அதிகம் ஆக பங்குச்சந்தை அதிக லாபம் கொடுக்கும் அனால், ரிஸ்க் அதிகம். Sathyam Computers நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நிலையை யோசித்து பாருங்கள். அதல பாதாளத்துக்கு போய் விட்டார்கள். இதுதான் பங்கு சந்தையின் அபாயத்துக்கு ஒரு எச்சரிக்கை மணி. பங்கு சந்தையில் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை நம்முடைய தொடரை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் பங்கு சந்தை என்பது நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அதே நேரத்தில் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நிறைய விஷயங்களை தெரிந்துக்கொள்ள நேரமும், விபரமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Mutual Funds. இனி Mutual Funds பற்றி பார்போம்.

5. பரஸ்பர நிதி (Mutual Funds)
Mutual Funds என்பது நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி, அந்த பணத்தை பங்குச்சந்தை இல் முதலீடு செய்யும். நமக்கு பங்குச்சந்தை பற்றி படித்து, விஷயங்களை அலசி பார்த்து எந்த பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்ய நேரமில்லை அல்லது அதற்கான விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்று நாம் நினைத்தால் நாம் நாட வேண்டியது Mutual Funds ஐ தான். நம்மிடம் இருந்து வாங்கும் பணத்தை நல்ல நிறுவன பங்குகளில் முதலீடு செய்து, நமக்கு நல்ல வருமானம் கொடுக்கும் ஒரு வழிதான் Mutual Funds. இப்படி நமக்காக வாங்கி நமக்கு லாபத்தை கொடுப்பதற்காக Mutual Funds நம்மிடம் ஒரு தொகையை செலவு என்று வசூலிக்கும். இது நம்முடைய வருமானத்தில் இருந்து கழிக்கப்படும் என்பதால், நாம் இதை தனியாக செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப்பட்ட வசதியோடு வரும் Mutual Funds நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் யோசித்து பார்த்து, முதலீடு செய்வது நலம்..

சரி படிச்சிட்டீங்கல்ல, கீழே இருக்கும் Tamilish இல் ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க. மறக்காம உங்க கருத்தை பின்னோட்டத்தில் எழுதுங்க.

8 comments:

malar said...

Mutual Funds எந்த வங்கிகளில் கட்டலாம் .எவளவு நாள் அல்லது மாதங்களுக்கு ஒரு தடவை பணம் கட்ட வேண்டும் .இதில் குறைந்த பச்சம் எவளவு செலுத்தி கணக்குதொடங்க வேண்டும்? இதில் வரும் லாப நஷ்டம் நமக்கு எப்படி தெரியும் ?

Mutual Funds விளக்கம் வேண்டும் .அரசாங்க வங்கிகளில் Mutual Funds கட்டும் வசதி உண்டா ?

Kalyan said...

வருகைக்கு நன்றி மலர் அவர்களே. Mutual Funds வாங்க வங்கி மூலமாக இல்லாமல் நேரடியாகவே வாங்கலாம், Demat மூலமாகவும் வாங்கலாம். குறைந்த பட்சம் Rs.500/- செலுத்தியும் வாங்கலாம். NAV என்று சொல்லப்படும் தினசரி வெளியிடப்படும் Unit விலை மூலமாக லாபநஷ்டத்தை தெரிந்துகொள்ளலாம்.

Mutual Funds பற்றி ஒரு தனி பதிவு அடுத்து எழுதுகிறேன்.

Unknown said...

Kalyan, Great!! Information. Once I get my PAN will apply for DEMAT account. However, please eloborate us more about Gold Exchange Traded Funds.

Please oblige.

MOHIDEEN said...

very clear simple explanation even a lay man can understand.THANKS A LOT .KEEP UP .

நடராஜன் said...

பேராசை இன்றி பங்கு சந்தையில் முதலீடு செய்வது சிறந்தது

gomathi said...

Thanks sir

k.b said...

எளிமையாக, நல்ல, நேர்மையான முறையில் பகுதி அல்லது முழு நேரமாகவோ முதலீடு இல்லாமல் உழைத்து எதிர்பார்ப்புக்கு மேலாக பணம் சம்பாதிக்க விருப்பமா?
gettlcincome@gmail.com
என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்

http://gettlcincome.blogspot.com/

Anonymous said...

thelivaana padhivittamaikku nandri
surendrn

Page copy protected against web site content infringement by Copyscape