கடந்த ஆறேழு மாதமாக பணவீக்கம் என்று சொல்லப்படும் Inflation பற்றி அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பணவீக்கம் என்றல் என்ன? இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். இன்று ஒரு பொருளை நீங்கள் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடிகிறது என்றால் இதே பொருளை அடுத்த ஆண்டு அதாவது ஒரு வருடம் கழித்து வாங்க எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும்? ஏனென்றால் வருடா வருடம் அனைத்து பொருளின் விலையும் கூடத்தான் செய்யும். குறைந்தபட்சம் 105 ரூபாய் கொடுக்கவேண்டியிருக்கும். அலல்து 110 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். 105 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்றால் பணவீக்கம் 5%, 110 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்றால் பணவீக்கம் 10%. அதாவது இன்று நாம் 100 ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளுக்கு அடுத்த ஆண்டு 110 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். இதையே வேறுமாதிரி சொல்லவேண்டும் என்றால், அடுத்த ஆண்டு நாம் 110 ரூபாய் சம்பாதித்தால் அதனுடைய இன்றைய மதிப்பு 100 ரூபாய் மட்டுமே. அதனால் பணத்தை வீட்டில் இரும்புப்பெட்டியில் பூட்டி வைத்தால் பணம் பாதுக்காப்பாக இருக்கும், ஆனால் மதிப்பை இழக்கிறது என்று அர்த்தம்.
இந்தியாவில் கடந்த கால பணவீக்கத்தை கவனித்தால் அனேகமாக ஐந்து முதல் ஆறு சதவீதம் வரை இருந்திருக்கிறது. மூன்று மாதத்திற்கு முன் 12% ஆக இருந்த பணவீக்கம், இப்பொழுது நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை இருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள் பணவீக்கம் 3% வரை குறையலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. இருந்தாலும் நம்முடைய இந்த பதிவிற்கு பணவீக்கத்தை 6% உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். இப்போது வங்கியில் வைப்பு நிதிக்கு (Fixed Deposit) 8% வரை வட்டி கிடைக்கிறது. இந்தநிலையில் ஒருவர் வங்கியில் 100 ரூபாய் Deposit செய்கிறார் என்றல் ஒரு வருடம் கழித்து அவருக்கு 108 ரூபாய் கிடைக்கும். இதை வைத்து நமக்கு வருமானம் 8 ரூபாய் என்று கணக்கிடுகிறோம். உண்மையில் வருமானம் 8 ரூபாயா? இல்லை. பணவீக்கம் 6% என்ற நிலையில் இப்போது 100 ரூபாய்க்கு வாங்கும் பொருளை அடுத்த ஆண்டு வாங்க 106 ரூபாய் ஆகும் . நமக்கு வங்கி தருவதோ 108 ரூபாய். ஆக நமக்கு உண்ண்மையான வருமானம் 2 ரூபாய் மட்டுமே.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வங்கியில் நாம் செய்யும் Deposit க்கு வெறும் 4% வட்டி மட்டுமே கிடைத்தது. அந்த சூழ்நிலையில் நாம் செய்த Deposit மூலம் உன்ன்மையில் நமக்கு 2% நஷ்டம் தான் ஆனது. அதனால் நாம் முதலீடு பற்றி முடிவு செய்யும் முன் பணவீக்கத்தையும் மனதில் வைத்து முடிவு செய்ய வேண்டும். நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தை விட அதிக வருமானம் கிடைப்பதாக இருக்கவேண்டும்.
5 comments:
very good article
சூப்பர் அப்பு.
very nice
வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி பூச்சாண்டியார் அவர்களே...
உபயோகமான தகவல் தந்தமைக்கு நன்றி
Post a Comment